அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 116 பேர் பலி
அமெரிக்காவில் தென்கிழக்குப் பகுதியில் வீசிய பலமான சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தென்பகுதி மாநிலம் மிசூரியில் ஜொப்லின் நகர்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலமான சுழற்காற்று (டொர்னேடோ) வீசியது. இதன் வேகம் மணிக்கு 300 கி.மீ. வரை இருந்தது என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இந்தக் கடும் சுழற்காற்றின் பாதையில் சிக்கிய எல்லாவற்றையும் சுருட்டியெடுத்து, தரைமட்டமாக்கியது.
வீடுகள், கடைகள், அடியோடு பெயர்க்கப்பட்டன. வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. ஒரு பள்ளிக் கூடம் இந்தச் சுழற்காற்றில் சிக்கித் தகர்ந்தது. ஜொப்லின் நகரின் இரு மருத்துவமனைகளில் ஒன்று மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்தவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
மாநில ஆளுனர் ஜே நிக்ஸன் நேரடியாக மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இதனிடையே, டெக்ஸஸ், ஓக்லஹோமா, மிசூரி, நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சுழற்காற்று வீசக்கூடும் என தேசிய வானிலை சேவை நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த மாநிலங்களின் பல முக்கிய நகரங்களில் சுழற்காற்று வீசும் ஆபத்துள்ளதாக புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply