எகிப்திய வெளிவிவகார அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் பேச்சு
அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நபில் அல். அராபியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் எகிப்திய வெளிவிவகார அமைச்சருக்கு விரிவாக விளக்கிக்கூறியுள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற மீள்கட்டுமான பணிகள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் விளக்கியுள்ளார்.
இதேவேளை எகிப்தின் அண்மைய அரசியல் மற்றும் அரசியலமைப்பு முன்னேற்றங்கள் தொடர்பில் இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் விரிவாக கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அணி சேரா நாடுகளின் அமைப்பில் இடம்பெற்றுள்ள மேலும் பல நாடுகளின் பிரதிநிதிகளை அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் பீரிஸ் அங்கிருந்தவாறே இந்தோனேஷியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply