நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவராகக் கருதப்படும் நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதான நெடிவயனின் இயற் பெயர் பேரின்பநாயகம் சிவபரன் என்பதாகும். நோர்வே காவல்துறையினர் கடந்த வாரம் நெடியவனைக் கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர் செய்தனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நெடியவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நீதவான் உள்ளிட்ட ஐந்து நெதர்லாந்துப் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் நெடியவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நெதர்லாந்தில் புலிகளுக்காக திரட்டப்படும் பணம், நெடியவனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நெடியவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அதிகாரிகள் தொடர்ந்தும் நெடியவனிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குமரன் பத்மநாதன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தம் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply