புது வருட பணிகளைத் தொடங்க ஜனாதிபதி பெளத்த மத குருக்களின் ஆசிகளைய் பெற்றுக்கொண்டார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புது வருடத்தில் தமது பணிகளைத் தொடங்க முன்னர் அநுராதபுரம் மற்றும் ருவன்வெலிசாய ஆகிய புனித நகரங்களில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்து பௌத்த மத குருக்களின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
அநுராதபுரத்திலுள்ள எட்டு புனிதஸ்தலங்களின் தலைமை மத குருவான வண. பள்ளேகம ஸ்ரீநிவச நாயக்க தேரர், ருவன்வெலிசாய புனிதஸ்தல தலைமை மத குருவான வண. பள்ளேகம ஹேமரத்ன தேரர், மற்றும் லங்காராம விகாராதிபதி வண. ரலபனாவே தம்மாஜோதி தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, ஆளுநர் கருனாரத்ன தியுலகன அமைச்சர் எச்.எம். சந்திரதாஸ மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் உட்பட பெருந்தொகையான மக்கள் இது தொடர்பான வைபவங்களில் கலந்து கெண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply