ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனிவா சென்றுள்ள இலங்கைக் குழுவினர் சர்வதேசப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று ஜெனிவா சென்றுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இன்றைய முதலாவது நாள் அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 6 மணியளவில் உரையாற்ற உள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நட வடிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் இதன்போது விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, இலங்கை குழுவினர் சர்வதேச பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றம் சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply