பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய ஓய்வு

பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பாக அவர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அதிருப்தியடைந்தே அவர் ஓய்வுபெற முடிவு செய்ததாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடுத்து சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வுபெறும் முதலாவது அரச அதிகாரி இவர் எனவும் ஹுலுகல்ல தெரிவித்தார். பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய வின் பதவிக் காலம் எதிர்வரும் 18ம் திகதி நிறைவடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் 32 ஆவது பொலிஸ் மாஅதிபராக மஹிந்த பாலசூரிய கடந்த 2009 நவம்பர் மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். 1953 ஜூன் 18ம் திகதி பிறந்த அவர் தனது பிறந்த நாளிலேயே ஓய்வுபெறுவது குறிப்பிடத்தக்கது.

1978 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக் களத்தில் இணைந்த அவர் 33 வருடங்கள் அதில் பணியாற்றியுள்ளார்.

மஹிந்த பாலசூரியவுக்கு அடுத்தபடியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக என். கே. இளங்ககோன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாவார். விரைவில் 33 ஆவது பொலிஸ் மாஅதிபர் நியமிக்கப்படுவார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply