சிவிலியன்களின் இழப்புக்கள் தொடர்பான சரியான எண்ணிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது: ஜகத்
யுத்தத்தின் போது சிவிலியன்களின் இழப்புக்கள் தொடர்பான சரியான எண்ணிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது. ஏனெனில் இன்னும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எதிர்வரும் நாட்களில் இடம்பெயர்ந்த மக்களின் காணாமல் போன தரவுகளின் அடிப்படையில் எண்ணிக்கையினை கணிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
யுத்த அனுபவ செயலமர்வின் ஊடாக இலங்கை சர்வதேச சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை நிறைவேற்றியுள்ளது. இலங்கையின் வெளிப்படை தன்மையும் அனைவருக்கும் புரிந்துள்ளது. எனவே யுத்தத்தின் போது என்ன நடந்தது என்பதை நம்பகமான ஆதாரங்களுடன் உலக நாடுகளுக்கு விளக்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுத்த வெற்றி செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற விஷேச செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையின் வெளிப்படைத்தன்மை உலகுக்கும் புரிந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இலங்கையின் அனுபவம் என்ற தொனிப்பொருளிலான செயலமர்வு எதிர்ப்பார்த்ததை விட வெற்றியளித்துள்ளது. இந்த செயலமர்வில் கலந்து கொண்ட நாடுகள் அனைத்திற்கும் தமது நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனுபவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இலங்கை தொடர்பான செயலமர்வில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் ஆதாரபூர்வமாக பதிலளிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா,அமெரிக்கா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்கப்பெற்றன. எனவே தற்போது சர்வதேசத்தில் உலாவும் இலங்கைக்கு எதிரான போலி ஆவணத்துக்கு பதில் கிடைக்கும் வகையில் உறுதியான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் யுத்த காலப்பகுதியில் பொது மக்கள் இழப்புக்கள் தொடர்பான சரியான எண்ணிக்கையை வெளியிட தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தின் ஊடாக மிகவும் எளிய முறையில் தகவல்களை வெளியிட முடியும். ஆனால் கொல்லப்பட்ட எண்ணிக்கைகள் தொடர்பாக தற்போது வெளியிடும் தரவுகள் நம்பகத்தன்மை அற்றவையாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply