சுடுவதற்கு யாரும் உத்தரவிடவில்லை : கெஹலிய ரம்புக்வெல
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து பொலிஸ் ஆக்குறைத்த அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு யாரும் உத்தரவிடவில்லை என்று அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை திட்டவட்டமாக அறிவித்தது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கட்டுநாயக்க சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் கலகம் அடக்கும் பொலிஸாரை கூடமுதலில் பயன்படுத்தவில்லை. தடிகள் மற்றும் குடைகளுடனேயே ஸ்தலத்திற்கு விரைந்தனர். எனினும் பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற போது அருகில் இருக்கின்ற பொலிஸார் சுயாதீனமாகவே தாக்குதல் நடத்துவர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 50,60 பேர் கைது செய்யப்பட்டனர் சகலரும் தடுத்துவைக்கப்படவில்லை இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் சமாதானத்தையும் சட்டத்தையும் பாதுகாக்கவேண்டும். 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் இருக்கின்ற இடத்திற்கு 10 பொலிஸாரை அனுப்பமுடியாது.
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரே சீதுவையிலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஆக்குறைந்த அதிகாரத்தையே பயன்படுத்தியுள்ளனர் என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து ஐந்து நாட்களுக்குள் அறிக்கையிடுவதற்கு தனிநபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply