தமிழக அரசின் திட்டங்கள் அறிவிப்பு

அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்ப்ற்றியுள்ள அஇஅதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவிருப்பதாகவும், முந்தைய திமுக அரசின் திட்டங்கள் சில கைவிடப்படவிருப்பதாகவும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அறிவித்தார். புதிய அரசின் முதல் சட்டமன்றத் தொடரை முறைப்படி துவக்கிவைத்து உரையாற்றிய பர்னாலா, குறிப்பாக திமுக அரசால் கட்டப்பட்ட புதிய் தலைமைச் செயலக ம்ற்றும் சட்டமன்றக் கட்டிடத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துதள்ளதாகவும் அது குறித்து நீதிவிசாரணை மேற்கொள்ளபடும் என்றும் கூறினார்.
பர்னாலா பேரவையில் வைக்கப்பட்ட தனது உரையை முழுவதுமாகப் படிக்கவில்லை. சில முக்கியபகுதிகளைப் படித்துவிட்டு அமர்ந்தார். மொழிபெயர்ப்பில் முழுவதுமாகப் படிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு பேரவைத்தலைவர் படிக்கும்போது, திமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்ட சொத்துக்க்ள் மீட்கப்பட சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கைவிடப்படுவதாகவும் அதற்கு பதிலாக புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

செயலிழந்துள்ள அரசு கேபிள் நிறுவனத்திற்குப் புத்துயிர் ஊட்டப்படும், ஆனால் தனியார் கேபிள் டிவி அமைப்புக்கள் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புற ஏழைகளுக்கான கலைஞர் வீட்டு வசதித் திட்டமும் ரத்து செய்யப்படுகிறது. புதிதாக சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.

தற்போது உருவாகிவரும் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் காலதாமதமாகும் என்பதால், மோனோ ரயில் இயக்கப்படும் என்றும் சென்னையில் துவங்கி மற்ற நகரங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகளிர் அனைவர்க்கும் மிக்சி, க்ரைண்டர், பேன் போன்றவை எதிர்வரும் செப்டம்பர் 15லிருந்து வழங்கப்படத் துவங்கும் எனவும் பர்னாலா அறிவித்தார்.

அதே நேரம் மாணவர்களுக்கு லாப்டாப் மடிக்கணினிக்ள் வழங்கப்படவிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் அகதி முகாம்களின் நிலை மேம்படுத்தப்படும் என்றும், முகாம் வாசிகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பொதுவாக அறிவிப்புக்களை வரவேற்பதாகக் கூறினார்.

ஆனால் தலைமைச்செயலக மாற்றம், கேபிள் டிவி குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அரசியல் காரணங்களுக்காக பல நல்ல திட்டங்கள் கைவிடப்படுவது தவறு என்று திமுக சட்டமன்ற அணித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், எவ்வித விசாரணைகளையும் திமுக சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜ்பக்சே போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply