அரசாங்கம் மாகாணசபைகளுக்கு போதியளவு அதிகாரங்களை வழங்கவில்லை : ஐ.தே.க
அரசாங்கம் மாகாணசபைகளுக்கு போதியளவு அதிகாரங்களை வழங்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.13ம் திருத்தச் சட்ட மூலத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு அரசாங்கம் அதிகாரங்களை வழங்கத் தவறியுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சஞ்சீவ கவிரட்ன தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. அரசியல் சாசனத்திற்கு உரிய மரியாதை அளிக்காத காரணத்தினால், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது 13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதென கூட்டறிக்கையின் மூலம் உறுதியளித்திருந்தார்.
அதிகாரப் பகிர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் தமது கோரிக்கைகளை நிராகரித்து வந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதனை தவிர மாற்று வழி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply