கூட்டமைப்பு கொள்கை ரீதியான அமைப்பு அரசிடம் ஒருபோதும் விலை போகாது : அரியநேத்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியான ஓர் அமைப்பு. இல்லாவிட்டால், ஆறு சுற்றுப் பேச்சுகளின் போது அரசிடம் விலை போய் இருக்கும். எமது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வாக்களித்த மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமிழ் இனத்தை காட்டிக் கொடுக்கமாட்டார்கள். அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு விலை போவது கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அல்ல. கூட்டமைப்பு கொள்கை ரீதியான ஓர் அமைப்பு. நாம் மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ப மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படக்கூடியவர்கள். அதனால் எமது நிலைப்பாடு என்ன என்பது வாக்களித்த மக்களுக்கு நன்கு தெரியும். இல்லையேல், அரசுடனான 6 சுற்றுப் பேச்சுகளின்போது கூட்டமைப்பு விலைபோயிருக்கும். அரசுக்கு அரசியல் தீர்வு வழங்குவதை விட அமைச்சுப் பதவி வழங்குவது இலகுவானதாகும்.
எனவே, எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஒருபோதும் நாம் துரோகம் இழைக்கமாட்டோம். தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய விடயங்களானால் இணைந்தும், தீமையான விடயம் என்றால் எதிராகவும் கூட்டமைப்பு செயற்படும். அதுமட்டுமின்றி, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் யார் என் பதை மக்கள் நிரூபிப்பர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply