இலங்கைக்கான ஆதரவை ரஸ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் கூட்டமைப்பு
கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கெலோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை ரஸ்யா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரப்புரைகளை மேற்கோண்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்து வரும் ரஸ்யாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் ரஸ்யா, சீனா போன்ற நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply