கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு

தொலை பேசி நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் பிணை மனு டில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் கைதாகியுள்ள கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமாரின் பிணை மனுவையும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பரிஹோக் நிராகரித்தார்.
தொலை தொடர்பு அமைச்சராக ஆ ராசா இருந்த போது அவர் முறைகேடாக அலைக்கற்றைகளை அளித்ததாகவும் அதில் பயன்பெற்ற ஒரு நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாயை அளித்துள்ளதாகவும் சிபிஐ கூறுகிறது. இது லஞ்சப் பணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது வர்த்தக ரீதியான கடன் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேருக்கு எதிராக பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply