சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மொழி பயிற்சி

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இந்த தமிழ் மொழி பயிற்சி நெறி 6 மாத காலத்திற்கு வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலையில் இரண்டு மணி நேரம் தமிழ் மொழி பயிற்சிகள் வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனைக்கு அமைய,  தேசிய மொழிகள் நிறுவனம் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள அனுபவமுள்ள விரிவுரையாளர்களினால் இந்த தமிழ் மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி, உருவாக்கப்பட்டுள்ள இந்த பாட நெறியில், பேச்சு பயிற்சிகள் மற்றும் செயல் முறை பயிற்சிகள் என்பன வழங்கப்பட உள்ளன.

முதல் குழுவுக்கான தமிழ் மொழி பயிற்சி நெறி, நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த 30 பேர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply