ஜனாதிபதி பதவியேற்று குறுகிய காலத்துள் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதொழிப்பு :அமைச்சர் மைத்திரிபால

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வரும் போது நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் கொண்டிருந்த சகல நிர்வாகக் கட்டமைப்பும் குறுகிய காலத்திற்குள் துடைத்தெறியப்ப ட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் புலிகள் இயக்கத்தினரை முழுமையாகத் தோற்கடிப்பதற்காக மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் இருதயபூர்வமாக ஆதரவு நல்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7உள்ள மகா வலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தி யாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதி பதியாகப் பதவியேற்கும் போது இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக் கத்தினர் தனியான நீதி, நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் வங்கிகளை நடத்தினர்.

நீதி மன்றங்களையும், பொலிஸ் துறையையும் கொண்டிருந்தனர். அவர்களது அனைத்து நீதி, நிர்வாகக் கட்டமைப்புக்களும் ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்துவரும் சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதேநேரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல வெற்றிகளையும் இக்காலப் பகுதியிலேயே இந்நாடு அடைந்தும் இருக்கிறது என்றார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த், டளஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்தன, டாக்டர் ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, எம். பி. நந்தன குணத்திலக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply