சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினர் இன்று தமிழ்க் கூட்டமைப்பினருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இன்று காலை கொழும்பில் இந்தச் சந்திப்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் ஆகிய மூவரையுமே கூட்டமைப்பினர் இன்று சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு தொடர்பான விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்தும் அன்றாட பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்ற போதிலும் இதுவரை எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் இணக்கம் தெரிவித்தபோதிலும் அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாகவும் இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் எடு—த்துக்கூற கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய தூதுக் குழுவினருடனான சந்திப்பில் இரா. சம்பந்தன் எம்.பி.யின் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எம்.பி.க்களும் பங்குபற்றவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply