ஜனாதிபதியின் அழைப்பை இந்தியப் பிரதமர் ஏற்றார்

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட இந்திய உயர்மட்டக் குழு நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் கடிதத்தை இந்தியக் குழுவினர் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜெயசேகர வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இலங்கை வந்திருந்த இந்தியக் குழுவினர் மரியாதையின் நிமித்தம் ஜனாதிபதியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை; இந்தியக் குழுவினர் நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந் ததுடன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் தனியாகச் சந்தித்துக் கலந்துரை யாடியிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply