ஜெயலலிதா – மன்மோகன் சந்திப்பு: இலங்கை கடற்படை குறித்து பேச்சு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போதே முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். கச்சத்தீவில் தமிழர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply