யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : பிரித்தானியா
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் செனல்4 ஊடகத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.இந்த ஆவணப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பிரட் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இந்த வீடியோ காட்சிகள் ஆதாரமாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொள்ளத் தயார் என பிரித்தானியா அறிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்று முழுதாக நிராகரித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply