வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அடுத்த வாரம் பதவி ஏற்கிறார்
வங்காளதேசத்தில் நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சி 230 இடங்களிலும், அவரது கூட்டணி கட்சிகள் 32 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து புதிய அரசாங்கம் அடுத்த வாரம் பதவி ஏற்கும் என்று அவர் அறிவித்தார். அவர் நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி அயாஜுதீன் அகமதுவை சந்தித்தார். அப்போது அவர் எப்போது விரும்புகிறாரோ, அப்போது பதவி ஏற்கலாம் என்று ஜனாதிபதி கூறியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை ஆட்சி அமைக்கும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்ததும், அடுத்த வாரம் நாங்கள் பதவி ஏற்போம் என்று அவர் கூறினார்.
தேர்தல் முடிவுகள் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்ட பிறகு தான் ஜனாதிபதி அவரை ஆட்சி அமைக்க அழைப்பார். விரைவில் கெஜட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் கமிஷனர் அறிவித்தார்.
இதற்கிடையில் ஹசீனாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், வருகிற 5-ந் தேதி பதவி ஏற்பு விழா இருக்கும் என்று தெரிவித்து உள்ளதாக அந்த நாட்டின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply