த.தே.கூ பிரசாரக் கூட்டத்தில் குழப்பம்: இராணுவத்தினருக்கு தொடர்பு இல்லை
யாழ். அளவெட்டியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் இராணுவத்தினர் புகுந்து தாக்குதல் நடத்தியமை தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கூட்டமைப்பினர் முறையிட்டுள் ளதுடன் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடமும் புகாரிட்டுள் ளதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இக்குற்றச் சாட்டுகளை நிராகரித்தார்.
இராணுவத்தினர் வழமை போல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கூட்ட மொன்று நடப்பதை அவதானித் தனர். என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர் விசாரித்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என இராணுவத்தினர் விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல் கூட்டம் நடத்த முடியாது என இராணுவத்தினர் கூறினர். அப்போது எம்.பி.க்களின் மெய்ப் பாது காவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர் என்றார். இப்பகுதியில் எந்தக் கட்சியும் கூட்டம் நடத்துவதில் எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை. இப்பகுதியில் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். எனவே இங்கு என்ன நடை பெறுகிறது என்பதை இராணுவத்தினர் அறிந்திருக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply