‘கொலைக்களம்” ஆவணப்படம் உண்மையற்றது

இலங்கையின் கொலைக்களம் என்னும் ஆவணப்படம் உண்மைக்குப் புறம்பானது என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த 14ஆம் திகதி இரவு ஒளி பரப்பப்பட்ட இந்த ஆவணப்படம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் போர் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த வைத்தியசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களை இலக்குவைத்து படைத்தரப்பினரால் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுவது எல்லாம் வெறும் பரப்புரைகள்.

எத்தகைய ஆதாரங்களும் இன்றி இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கவேண்டும். பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட மூன்று இலட்சம் மக்களை நாம் மனிதாபிமான அடிப்படையில் மீட்டுள்ளோம் என்பதே உண்மையாகும்.

இந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது நாம் ஆறாயிரம் படையினரை இழந்துள்ளோம். இலங்கையில் இத்தகைய போர் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply