அமெரிக்க நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்
அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநாட்டு சட்ட நடவடிக்கைகளை நிராகரிப்பதற்கு இலங்கை அரசியல் சாசனத்தில் இடமிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயங்களை தடுத்து நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply