அரசிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை
அதிகாரத்தை பரவலாக்குவது சம்பந்தமாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில், தீர்மானகரமான பேச்சுவார்த்தை ஒன்று நாளை நடைபெறவுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு, அரசாங்க தரப்பில் பதில் கிடைக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில், அரசாங்கத் தரப்பில், அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply