இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதனை மாவை சேனாதிராசா நிராகரிப்பு
இம்மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாடு ஒன்று இடம்பெற்றது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மகாநாட்டில் இலங்கையின் இனப்பிரச்சினை, இறுதி யுத்த காலப்பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இம் மகாநாட்டில் தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர்.
தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பங்குபற்றி கருத்துக்களை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் எனும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைப்பதற்காக மாவை சேனாதிராஜா வுடன் தொடர்பை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்களுக்கு மாவை அளித்த பதில் பெரும் ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரியவருகிறது. எனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் என்னால் இம்மாநாட்டிற்கு வர முடியாது எனவும் வேறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதாயின் கட்சி குழு கூடியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டார்.
இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான மகாநாட்டை விட மாவை சேனாதிராஜாவிற்கு வேறு என்ன முக்கிய அலுவல்கள் இருந்திருக்கும் என்பது ஆச்சரியத்துக்குரியதொன்றாகும்.
ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாட்டிற்கு கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்குமா என்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கும்.
இம் மகாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து வைகோ, இலங்கையிலிருந்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பலர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply