இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.

இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் ‘ஹூடூ’ இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்

பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது. ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர். இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply