ஜனாதிபதியின் சார்பில் அமெரிக்க நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமெரிக்க நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க நீதிமன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் குறித்த சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சட்டத்தரணிகள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முப்படைகளின் சேனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அமெரிக்க நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என நீதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். தென் கொலம்பிய நீதிமன்றினால் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply