அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கை பிரசாரம் மேற்குலக நாடுகளில் போதவில்லை: காரியவசம்
இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து மேற்குலக நாடுகளில் வலுவான பிரசாரங்களை மேற்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் மேற்குலக நாடுகளில் நடவடிக்கைகளை விடவும் மந்த கதியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு காலத் துக்குகாலம் விளக்கமளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட விவரணப்படம் போலியானது என குறிப்பிட்ட அவர் இதன் மூலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்கப் பணிகளுக்கு நன்மையளிக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தினை மாத்திரம் அடிப்படையாக முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டம் நாட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய நாட்டின் சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வரு வதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply