சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை
நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன.
நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறான கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நலனை விட நாட்டு நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply