இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்படலாம்

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்புள்ளது என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்த ஆகியோர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாடினர். இதன்பின்பு பிரச்சினைக்கு செவ்வாய்க்கிழமை ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய சிறையில் பல இலங்கை மீனவர்கள் கூட விடுவிக்கப்பட வேண்டியுள்ளனர். நாம் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் 70 இலங்கை மீனவர்கள் இந்திய சிறையில் உள்ளனர். இதேவேளை, ஆந்திர பிரதேசம், ஒரிசா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதியில் கைது செய்யபட்ட இலங்கை மீனவர்களுக்கு நீண்ட கால சிறைத் தண்டனை கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply