சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியில் முதன் முறையாக பெண்ணொருவர்
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தற்போதைய நிதியமைச்சரான கிறிஸ்டைன் லகாட்டே(55) இப்பதவிக்கு தெரிவாகியுள்ள முதல் பெண்ணாவார். இத்தகவலை சர்வதேச நாணய நிதியம் நேற்று இரவு உறுதி செய்தது. இவரது 5 வருட பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந் நிதியத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய டொமினிக் ஸ்ரோஸ் கான் பாலியல் புகார்களையடுத்து பதவிவிலகினார்.
ச.நா.நிதியத்தின் தலைமைப் பதவிக்கு வளர்ந்து வரும் நாடொன்றிலிருந்து நபரொருவர் தெரிவு செய்யப்படலாம் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply