தாக்குதல்களை நடத்தி மீண்டுமொரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சி : பொன்சேகா

வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதானது மிகவும் இலகுவான விடயமாகும். இதற்கு நடவடிக்கை எடுக்காது வடபகுதி அரசியல் வாதிகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணைகளுக்கென சரத் பொன்சேகா நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வடக்கு மக்களின் தனித்துவம் மற்றும் அவர்களது கலாசார விடயங்கள் தொடர்பில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் வடக்கிலுள்ள தமிழ் மக்களும் தேவையற்ற விதத்திலான கோரிக்கைகளை முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது எல்லாகோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைக்க வேண்டிய தேவையும் இல்லை. வடக்கு மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply