பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதே எனது தற்போதைய இலக்கு :KP

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதே தமது தற்போதைய இலக்கு என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு அரசியல் குறித்து சிந்திக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னர் ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பினால் முழுமையான பாதுகாப்பை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு தமி;ழ் மக்களின் நிலைமைகளை கண்டறிவதற்கு விரும்புவோர் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பேணி வருவோரின் தரவுகளை வெளியிட்டு துரோகச் செயல் மேற்கொள்ளப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். யார் யார் பணத்தை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்து அவர்களை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் பணத்தை பேணுவோர் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் அவற்றை வெளியிடப் போவதாகவும் முன்னைய செவ்வி ஒன்றில் குமரன் பத்மநாதன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணத்தை வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை உள்ளிட்ட கடந்த கால குற்றச் செயல்களுக்காக ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தொடர்ச்சியாக பழையவற்றை கிளறுவதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணத்துடன் புலிகளுக்கு தொடர்பு காணப்பட்டதா என்பது தமக்கு தெரியாது எனவும், அவ்வாறு ஏதேனும் தொடர்பு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோரத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply