இலங்கையுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது : பெட்ரிசியா

இலங்கையுடனான உறவுகளில் எவ்வித பாதிப்பும் கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் சாதக நிலையை அடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இளைஞர் விவகாரங்களை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு வழிகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply