விமானப்படைத் தலைமையகத்துக்கு முன்னால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இருவர் பலி, 32 பேர் காயம்
கொழும்பு விமானப்படைத் தலைமையகத்துக்கு முன்னால் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சைக்கிளில் சென்ற தற்கொலைக் குண்டுதாரி சோதனைச் சாவடியிலுள்ள விமானப்படையினரால் சோதனைக்கு நிறுத்துமாறு அழைத்தபோதே குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்த 32 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் பயணிகள் பேரூந்தொன்றும், சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதமேற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கிளிநொச்சி நகரம் கைப்பற்றப்பட்ட வெற்றிச் செய்தியை பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவித்து உரைநிகழ்த்தி சில நிமிட நேரத்துக்குள் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply