புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளன : நெதர்லாந்து

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கையில் நடத்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சில உறுப்பினர்களிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குமரன் பத்மநாதன் உள்ளிட்டோரிடம் திரட்டப்பட்ட சாட்சியங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதர்லாந்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மொத்தமாக 13 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் ஜாகோ பீரன்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விசாரணை நடத்திய நெதர்லாந்து அதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர். புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஒருவரான நெடியவனிடம் ஒஸ்லோவில் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply