அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் லியாம் பொக்ஸ் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த கருத்தரங்கில் தமது உரையை நிகழ்த்துவதற்காக நேற்றிரவு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை வந்தார். இதனிடையே அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்துகலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இதுதவிர, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடனான சந்திப்பின் போது இரு தரப்பு விடயங்கள் பல ஆராயப்பட்டுள்ளன. லக்ஷ்மன் கதிர்காமர் நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஞாபகார்த்த கருத்தரங்கு நேற்று இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துரைத்த லியாம் பொக்ஸ் உலக பொருளாதார மேம்பாட்டில் இலங்கை பெரும் பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார ஸ்திரம் மிக்க நகரங்களில் இலங்கையின் சில நகரங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply