கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு: தேர்தல் ஆணையாளர்
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ் தேசியகூட்டமைப்பு வேட்பாளர்கள் படையினராலும் ஆயுதக்குழுக்களினாலும் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மின்அஞ்சல் மூலமாக செய்த முறைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணையாளர் இன்று செவ்வாய்கிழமை பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைத்தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெற தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நபர்கள், குழுக்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
வடபகுதியில் போட்டியிடும் அரசதரப்பு வேட்பாளர்கள் அல்லாத ஏனைய கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக ஐக்கியதேசிய கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply