கலாநிதி மாறனுக்கு சம்மன்

சன் குழுமத்தின் தலைவர் ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் வருமாறு சென்னை காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இது குறித்து  கருத்து வெளியிட்ட சென்னை காவல் துறை இணை ஆணையர் சண்முக ராஜேஷ்வரன், புதன்கிழமையன்று வருமாறு கலாநிதி மாறனுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

“தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பு தொடர்பில் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக ஒரு விசாரணை நடைபெறுகிறது.

இதன் தொடர்பாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ்சின் ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவழக்கு விசாரணை தொடர்பாகத்தான் கலாநிதி மாறனும் அழைக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply