‘மும்பை குண்டுவெடிப்பில் 10 பேர் பலி’

இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புகளில் 10 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 54 பேர் காயமடைந்ததாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 என்று மஹாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சௌகான் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அமைச்சர் சிதம்பரம் டில்லியில் தெரிவித்துள்ளார். இதில் இரண்டு குண்டுகள் நகரின் மத்திய பகுதியிலும் ஒன்று நகரின் தென் பகுதியிலும் வெடித்துள்ளன.

இவை ஐ ஈ டி என்னும் வெடிபொருளை உள்ளடக்கிய குண்டுகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் மும்பையில் இவ்வாறான தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

2008 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தீவிரவாதிகளால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 150 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களாக குற்றஞ் சாட்டப்பட்டிருப்பவர்களில் உயிரோடு இருக்கும் ஒரேயொருவரான முஹமட் கசாப்பின் பிறந்த தினத்தில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று இந்திய உள்துறை அமைச்ச்சர் வர்ணித்துள்ளார். பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply