வட மாகாணம், 2010 ஆம் ஆண்டில் 22.9 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை கண்டுள்ளது : மத்திய வங்கி
இலங்கையின் மாகாண பொருளாதார வளர்ச்சி குறித்து இலங்கையின் மத்திய வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், போரிலிருந்து மீண்டிருக்கும் வட மாகாணம், 2010 ஆம் ஆண்டில் 22.9 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை கண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. 2009ம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.
போர் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கிடையாது என்று கூறுகிறார் இலங்கைப் பொருளாதரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தா.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு என்பது போரின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் போரினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளின் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்போது, அந்தப் பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி அதிகரிப்பை வைத்து மாத்திரம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனி நபர் வருமான, வேலைவாயப்பு வசதிகளுக்கான சுட்டிகள் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஆனால் இவற்றை அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ மறைத்து வருகின்றது” என்றும் சர்வானந்தா கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply