வடபகுதி மக்கள் துணிச்சலுடன் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்: ஜேவிபி

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறாத நிலையிலும் வட பகுதி மக்கள் துணிச்சலுடன் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நாட்டில் சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டுமென்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.  நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. யின் அரசியல் பீடம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரச வளங்களை, அதிகாரத்தை பயன்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்தி தாக்குதல்களை நடத்திய சூழ்நிலையிலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தியது. விசேடமாக வட பகுதி மக்களின் வாக்குகளை பறிப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்தி பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள்ஆணையாளருக்கும் பொலிஸ் அதிபருக்கும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தேர்தலிலும் மக்களின் விருப்பத்தை சுதந்திரமாக வெளியிட முடியாது தடுக்கப்பட்டது. இவ்வாறான தொரு சூழ்நிலையிலும் வட பகுதி மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர். வழமையாக இத் தேர்தலுக்கு பின்னரும் மக்கள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரிக்கும். அச்சுறுத்தல்கள் இருந்தபோதும் எமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply