தமிழ் மக்களின் தீர்ப்பை அங்கீகரித்து தாமதமின்றி செயற்படவேண்டும்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை அங்கீகரித்து, மதித்து தாமதமின்றி செயற்பட முன்வருமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தும் அதற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ் மக்கள் அளித்து வந்துள்ள திட்டவட்டமான செய்தியையே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தீர்ப்பாக தமிழ் மக்கள் ஐயத்திற்கு இடமேயில்லாத வகையில் அளித்துள்ளனர்.
1956ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் தெரிவித்து வரும் செய்தி இதுதான். பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பையும் கௌரவத்தையும் மீண்டும் பெற்று சமமான பிரஜைகளாக வாழும் உரிமையை விட்டுக்கொடுக்காத, சட்டபூர்வமான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை பூரணமாக அடைவதற்கான ஆட்சியுரிமையை அடைய வேண்டும் என்பதே. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இடம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய காணிகளில் ஒழுங்கான வீட்டு வசதிகள், வாழ்வாதார வாய்ப்புக்கள் மற்றும் அடிப்படைத்தேவைகளுடன் விரைவாக மீளக்குடியமர்த்தப் படுவதுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென்பதே. தமிழ் மக் களின் தேர்தல் தீர்ப்பாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலத்தில் தீமை விளைவிக்கக்கூடியதான அவர்களுடைய காணி, வணக்க ஸ்தலங்கள், கலாசார இடங்கள் மற்றும் ஏனைய இடங்கள் தொடர்பாக அரசாங்கமும் அல்லது அரசின் முகவர்களும் மேற்கொண்டுள்ள அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும். அல்லது பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் கேட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply