தமிழர் சமஷ்டி கோர முடியாது : ஹெல உறுமய

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

‘நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக வடக்கு உட்பட நாடு முழுவதும் 56 வீதமான மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி கூறியுள்ளது.

முகத்தில் ஆவேசம் பொங்க, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்புக்கு எதிராக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு வரவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பெயர்களைக் கூறியபடி எச்சரிக்கை தொனியில் பேசினார் சம்பிக்க ரணவக்க.

‘பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் சாத்தியமாகாது’ என்றும் பேசியுள்ளார் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்கு தேசியவாதக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவக்க.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply