வன்னியில் மனிதாபிமான மீட்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போர் முன்னரங்கப் பகுதிகளில் கட்டளைத் தளபதிகளாக கடமையாற்றிய உயர் படைத் தளபதிகளின் சாட்சியங்களின் தொகுப்பாக இந்த ஆவணம் அமைந்துள்ளது.
படையதிகாரிகள் நேரில் கண்ட காட்சிகளை பதிவு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் 1ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply