லிபிய கிளர்ச்சிப் படைகளின் தலைமை அதிகாரி சுட்டுக் கொலை

லிபிய கிளர்ச்சிப் படைகளின் தலைமை அதிகாரியான அப்டெல் படா யூனிஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடாபி அரசுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டமையும் கிளர்ச்சியாளர்களின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இவர் தனது படையைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் கடாபி ஆதரவு இரகசிய படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்களின் தலைமை அறிவித்துள்ளது.

இராணுவ விடயம் ஒன்று தொடர்பில் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த பெங்காசியிற்கு பயணித்துக் கொண்டிருந்ததாகவும் அதன் போதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் இடையே பிரிவினை தோன்றும் சாத்தியம் நிலவுவதாகவும் அவர்கள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து அவர்களுக்கிடையே மோதிக்கொள்ளும் சாத்தியம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளர்ச்சியாளர்களுடன் இணைவதற்கு முன்னர் அப்டெல் படா யூனிஸ் கடாபியின் அரசாங்கத்தில் உட்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply