ஐ.தே.க. வின் தலைமை பதவியை ஏற்பதற்கு கரு ஜயசூரியா இணக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பிரதித் தலைவரும், எம்.பி.யுமான கருஜயசூரிய பொறுப்பேற்க வேண்டு மென்ற கோரிக்கை முன்வைக்கபட்டதாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்சியின் மறுசீரமைப்புக்கு ஒத்துழைத்தவர்கள் பழிவாங்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதும், ஒற்றுமையின்மையுமே தேர்தல் தோல்விக்கு காரணமென்றும் அவர் தெரிவித்தார். கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச எம்.பி. இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச எம்.பி., இன்று கட்சியில் ஒற்றுமையில்லை. ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு கட்சி பின்னடைவைக் கண்டுள்ளது.
இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே கடந்த மே மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் பெற்ற 34 வீதமான வாக்கு வீத வளர்ச்சி அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 22 வீதமாக குறைவடைந்துள்ளது.
எனவே கட்சியை ஒற்றுமைப்படுத்தி முரண்பாடுகளை களைந்து வெற்றி பெறும் கட்சியாக பலப்படுத்த வேண்டியது அவசரமாக விடயமாகும்.
இதற்கு மத்தியஸ்த நிலைப்பாட்டிலுள்ள பிரதித் தலைவர் கரு ஜயசூரியவே சிறந்தவர் என்ற தீர்மானத்திற்கு நாம் வந்ததோடு, கரு ஜயசூரிய எம்.பி.யை இன்று (நேற்று) சந்தித்து நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறும் கோரிக்கை விடுத்தோம்.
இதற்கு அவர் சாதகமான பதிலை வழங்கியதோடு, எமது கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply