சனல்4 வெளியிட்ட விபரங்கள் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கம் : ஐ.நா
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமை எனவும் அதனை கண்காணிப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சனல் 4 தொலைக்காட்சி புதன்கிழமை இரவு வெளியிட்ட இலங்கையின் போர் குற்ற ஆதார காணொளி குறித்து நேற்று முன்தினம் ஐ.நா. அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
சனல் 4 காணொளி குறித்து ஐ.நா. நடவடிக்கை எடுக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி சனல் 4 கூறிய விடயங்கள் நிபுணர் குழு அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
நடவடிக்கை எடுப்பது குறித்து விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மார்ட்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை ஐ.நா. பொதுச் செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர்கள் பார்த்துள்ள நிலையில் பொதுச் செயலாளர் பார்த்தாரா இல்லையா என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என மார்ட்டின் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply