யுத்த வலயத்தில் மனித உரிமை மீறல் நியாயப்படுத்த முடியாது : நிரூபமா ராவ்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுமென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 ஊடக ஆவணப்படம் தொடர்பில் உன்னிப்பதாக அவதானிக்கப்பட வேண்டுமென கூறியுள்ள நிரூபமா ஆவணப்படத்தின் அடிப்படையில் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதியாவதாக தெரிவித்துள்ளார். மேலும் யுத்த வலயத்தில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கையுடன் சில விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நிரூபமா ராவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply