செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ வன்மையாகக்கண்டிக்கிறது
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை சிறிரெலோ கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது. வடக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் உலகநாடுகளிற்கு கூறிவரும் நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனாமான தாக்குதல் ஊடகவியலாளன் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பதானது உலகலாவியரீதியில் அரசாங்கத்திற்கு ஒர் பாரிய பின்னடைவை தோற்றுவித்திருக்கிறது.
கடந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் அளவெட்டிப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் கட்சி ஒன்றின் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலினை இனம் தெரியா நபர்கள்மேற்கொண்டதனால் அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்ட இந்த தருணத்தில் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துவரும் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் மீது உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிப்பதுடன் இச்செயல் வடக்கில் அரசாங்கத்திற்கு மேலும் பாரியபின்னடைவையே தோற்றுவித்திருக்கிறது.
சுயநல அரசியல்வாதிகளும் அவர்களின் இவ்வாறான அடாவடித்தனங்களும் இனிமேல் எமக்கு வேண்டாம் என்ற நோக்கோடே நாம் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்தாகவும்.வடக்கு மக்கள் மீது அரசாங்கம் உண்மையான அக்கறை கொண்டிருக்குமாயின் இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னனியில் உள்ளோரை கண்டு பிடித்து சட்டத்தின் முன்னிருத்தவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கைவிடுக்கின்ற அதேவேளை சுயநல அரசியல் வாதிகளின் இவ்வாறான தாக்குதக் தமது குரல்வளைகளை நசுக்காது என்றும் தெரிவித்துள்ளனர், எது எவ்வாறு இருப்பினும் வடக்கு மக்கள் மீது அரசாங்கம் உண்மையாக கரிசனை கொண்டிருக்குமாயின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சிறிரெலோ கட்சி வேண்டுகோள்விடுக்கிறது.
ஊடகச்செயலாளர் சிறி ரெலோ
எஸ்.செந்தூரன்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply